கள்ளச்சாராயம் விவகாரம்: இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்.!

கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 22 பேர் உயிரிழந்த நிலையில்,  அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருட்கள் பழக்கம், கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விசாரணைக்கு வலியுறுத்தி எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ரவியிடம் இன்று மனு அளிக்க உள்ளார். சைதாப்பேட்டையில் இருந்து இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.