இரங்கல் செய்தி வெளியிட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்

By Dinasuvadu desk | Published: Aug 07, 2019 01:15 PM

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் .இதனிடையே அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர் அதில் கூறியிருப்பதாவது  ஈபிஎஸ் : மத்திய வெளியுறவுத் துறை ,பாஜகவின் முக்கிய தலைவர் களில் ஒருவராகவும் அரசியல் உலகில் மதிக்க தக்க பெண்ணாகவும் விளங்கிய சுஷ்மா சுவராஜின் மறைவை அறிந்த நான் அதிர்ச்சியும்  மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் அவரது குடம்பித்தினர்க்கும் மட்டுமில்லாமல் நாட்டுக்கே பேரிழப்பாகவும் அவரை இழந்து வாடும்  குடும்பித்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் . ஓபிஎஸ் : முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது .அவர் டெல்லியின் முதல்வர் ,பொறுப்பு பிரதமர் என பல்லவேறு பொறுப்புகளில் வகித்தவர் சுஷ்மா சுவராஜ் எனவும் நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா சுவராஜை இழந்து வாடு அவரது குடும்பத்தினர்க்கும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
Step2: Place in ads Display sections

unicc