வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு! விரைவில் இதற்கான அறிவிப்பாணை!

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

NEET – FMG தேர்வு எழுத விரும்புவோர் இன்று பிற்பகல் 3 மணி முதல் வரும் 29-ம் தேதி வரை https://nbe.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓரிரு நாளில் மருத்துவக் கலந்தாய்வு அறிவிப்பாணை வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும் நடைபெற உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு முடிந்து இடங்கள் ஒதுக்கப்பட்ட உடனேயே தேர்வுக்குழுவிடம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லும் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும், சேர்க்கையை மறுப்பதைத் தடுக்கவும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யபடுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment