டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்க- உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில்

By surya | Published: Jul 10, 2020 02:01 PM

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டுமேன சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

தமிழகத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, கடந்த 2 வாரங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அதில், கடந்த ஓராண்டில் தமிழகத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 9,319 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc