வடித்த சாதம் இருந்தால் போதும்….! 5 நிமிடத்தில் வித்தியாசமான சுவை கொண்ட சாதங்கள் செய்யலாம்!

இந்தியர்களின் பாரம்பரிய உணவான அரிசி இன்றியமையாத ஒரு தினசரி உணவாக உள்ளது. இந்த சாதத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆற்றலை அள்ளித்தர இது உதவுகிறது. இந்த அரிசியை வைத்து பல வகையான சாதங்கள் தயாரிக்க முடியும். இன்றும் நம் வீட்டில் காய்கறிகள் அல்லது மீன், இறைச்சி போன்ற பொருட்கள் இல்லாத சமயங்களில் எப்படி ஐந்து நிமிடத்தில் விரைவில் அட்டகாசமான சுவை கொண்ட சாதங்களை தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

1. தயிர் சாதம்

தயிர் சாதம் பலருக்கும் பிடித்தமான உணவாகவும் உள்ளது. இதை எளிமையாகவும், எளிதாகவும் தயாரிக்க முடியும். அதை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

  • தயிர்
  • மிளகாய்
  • கொத்தமல்லி
  • உப்பு
  • இஞ்சி
  • கடுகு
  • எண்ணெய்

செய்முறை 

முதலில் சாதத்தை சற்று குழைவாக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதனுடன் தயிர், மிளகாய், கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து, இதை தயிர் சாத கலவையில் ஊற்றிக் கிளறி விடவும். அவ்வளவு தான் அட்டகாசமான தயிர் சாதம் ஐந்து நிமிடத்திலேயே தயார்.

2. லெமன் சாதம்

லெமன் சதம் ஒரு ஆரோக்கியமான மதிய உணவு. இந்த சாதத்திற்காக அதிகம் ஏதும் செலவிட தேவையில்லை. ஆறிப்போன சாதத்திலும் கூட இதை தயார் செய்யலாம். இதை 5 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது என்று அறியலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் 

  • கடுகு
  • உளுந்தம் பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • இஞ்சி
  • மஞ்சள் தூள்
  • கருவேப்பில்லை
  • எண்ணெய்

செய்முறை

முதலில் சாதத்தை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு எலுமிச்சை சாறுடன் சாதத்தைக் கலந்து எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து சாதத்துடன் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் அட்டகாசமான லெமன் சாதம் தயார்.

3. தேங்காய் சாதம்

இந்த தேங்காய் சாதம் சற்று இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் தென்னிந்திய மக்கள் தான் இதை அதிகளவில் விரும்பி உண்கின்றனர். இந்த சாதம் எளிமையாக  தயாரிக்க கூடிய ஒன்று, இதை எப்படி செய்வது, அறியலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் 

  • கடுகு
  • சீரகம்
  • கருவேப்பில்லை
  • பெருங்காயம்
  • எண்ணெய்

செய்முறை

முதலில் சாதத்தை தயாராக வைத்து கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பில்லை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்கவும். பின் தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்து, வடித்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து கிளறி இறக்கினால் அட்டகாசமான தேங்காய் சாதம் தயார்.

4. கொத்தமல்லி சாதம்

ஃபைபர், தாதுக்கள் மற்றும் விட்டமின் பி 6 கொத்தமல்லியில் அதிகம் உள்ளது. எனவே இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் எப்படி உடனடியாக சாதம் செய்வது என அறியலாம்.

தேவையான பொருட்கள் 

  • கொத்த மல்லி
  • வெங்காயம்
  • கடுகு
  • சீரகம்
  • இஞ்சி பூண்டு விழுது
  • கரம் மசாலா
  • புதினா
  • தயிர்

செய்முறை 

முதலில் கொத்தமல்லி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். பின் தயிர் மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பேஸ்டை கலந்து லேசாக பச்சை வாசனை நீங்கியதும் சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான கொத்தமல்லி சாதம் தயார்.

இது போன்று சுலபமான சுவையான சாதத்தை மழைக்காலங்களில் அல்லது வீட்டில் வேறேதும் காய்கறிகள் இல்லாத சமயங்களில் செய்து பாருங்கள் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.

author avatar
Rebekal