ஊட்டச்சத்து நிறைந்த சிக்கன் கார்ன் சூப்.! செய்முறை என்ன.?

ஊட்டச்சத்து நிறைந்த சிக்கன் கார்ன் சூப்.! செய்முறை என்ன.?

மாலையில் சிக்கன் கார்ன் சூப் சாப்பிடுவதை விரும்புகிறீர்களா…? ஒரு கார்ன் சூப் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில், சூடான ஆரோக்கியமான கார்ன் சூப் ஒரு கிண்ணத்தில்…ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முறுமுறுப்பான காய்கறிகள் மற்றும் இறைச்சி கூட நிரம்பிய எலுமிச்சை, தக்காளி, இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களுடன் தயாரிக்கப்படுவதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

சிக்கன் கார்ன் சூப் சாப்பிடுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா இது, இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த கலவையை நீங்கள் பருகும்போது உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.
சிக்கன் கார்ன் சூப் எப்படி செய்வது:-
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகள் சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
  • அதன் பின், சிக்கனை சேர்த்து வதக்கவும், இதனுடன் தேவையான கரம் மசாலா சேர்த்து கொண்டு வேக வைக்கவும்.
  • பின்னர் சோளத்தை சேர்த்து வதக்கவும். தனியாக 15 சோளமுத்துக்களை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். இதையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • பின் தனியாக கரைத்து இருக்கும் கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து கொதிக்க விடவும். பின் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube