ஒருநாள் போட்டியில் முதல் இடத்தில் கெத்து காட்டும் இங்கிலாந்து அணி

உலக்கோப்பை முதல்போட்டியில்கடந்த 30-ம் தேதி இங்கிலாந்து,தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை செய்தது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் அடித்தது.
இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகளில் ரன் ரேட்டின் படி இங்கிலாந்து அணி முதலில் உள்ளது .


 

author avatar
murugan