2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை..!

இங்கிலாந்து அணி 129 ஓவரில் 8 விக்கெட் இழந்து 423 ரன்கள் எடுத்து 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க முதல் நாளில் இந்திய அணி திணறியது. இந்நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோரி பர்ன்ஸ் 61 , ஹசீப் ஹமீது 68 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன், கேப்டன் ஜோ ரூட்  இருவரும் கூட்டணி அமைத்து அணியை சிறப்பாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த ஜோ ரூட் சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். நிதானமாக விளையாடி வந்த டேவிட் மாலன் 70 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களம் கண்ட ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து  களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 129 ஓவரில் 8 விக்கெட் இழந்து 423 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

murugan
Tags: ENGvIND

Recent Posts

என்னங்க சொல்றீங்க அனிருத் இல்லையா? சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…

25 mins ago

ஸ்டுடென்ட்ஸ் எந்த லேப்டாப் வாங்கலாம்-னு ரொம்ப குழப்பமா இருக்கா? இது தான் பெஸ்ட்!

Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…

44 mins ago

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…

60 mins ago

42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…

1 hour ago

தள்ளிப்போகும் பிரஸ் மீட்.! துல்லியமான தேர்தல் நிலவரம் எப்போது தெரியுமோ.?

Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…

2 hours ago

கருப்பு உலர் திராட்சையின் ஆச்சர்யமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான  நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…

2 hours ago