அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் என எதுவும் செய்யாமல் வென்ற கேப்டன் என்ற சாதனையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 172 ரன்களுக்கு சுருட்டியது. பிறகு பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஆலி பாப் 205 ரன்கள் மற்றும் பென் டக்கெட் 182 ரன்கள் குவிக்க 524/4 ரன்கள் எடுத்து முதல் இன்னிக்சை டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 362 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என எதுவும் செய்யாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றி பெற்ற ஒரே கேப்டன் என்ற வினோத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

author avatar
Muthu Kumar