முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் கதி அவ்வளவு தான்..!

By

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44 வது போட்டியில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இருப்பினும் பாகிஸ்தான் அணி முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி தங்களால் இயன்றவரை இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது.

   
   

தங்களின் நிகர ரன் விகிதத்தை அதிகப்படுத்த நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். இருப்பினும் இந்த போட்டியில் முதல் பந்தைக் கூட வீசாமல் அரையிறுதிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணி தற்போது 0.743 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 0.036 மற்றும் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் மட்டுமின்றி நிகர ரன் ரேட்டும் தேவைப்படுகிறது.

நியூசிலாந்தை விட சிறந்த நிகர ரன் விகிதத்தைப் பெற பாகிஸ்தான் 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து  பெரிய ஸ்கோரை அடித்து இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்திற்கு முன்கூட்டியே ஆல் அவுட் வேண்டும். ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகளும் மிகக் குறைவு. பாகிஸ்தான் முதலில் பந்துவீசினால் முதல் பந்தைக் கூட வீசாமல் அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கு காரணம், இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து  இரண்டாவதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து நிர்ணயித்த  ​​இலக்கை 2.4 ஓவர்களில் அதாவது 16 பந்துகளில் அடைய வேண்டும். 16 பந்தில் பாகிஸ்தான் இலங்கை அடைவது மிக மிக கடினம். அதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கும்.

ஆனால் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த திட்டமும் பாழாகிவிடும். இதனால் போட்டியின் முதல் பந்து வீசுவதற்கு முன்பே பாகிஸ்தான் கிட்டத்தட்ட உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Dinasuvadu Media @2023