வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடக்குமா?நடக்காதா?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது  வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பழகன், கலந்தாய்வு நிகழ்ச்சிகளை ஆன் லைன் மூலம் நடத்துவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment