#இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு-ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு

 இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு  கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஆண்டுதோறும், ஜூலை மாதத்திற்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்கப்படும் ஆக1ந்தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும்.

ஆனால் நடப்பாண்டில் கொரோனா தொற்று பிரச்னையால், அக்1 முதல், மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. நவ,31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இதனை மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நவ.,30 வரை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நடத்தலாம். டிச.,1ந்தேதிக்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும் என்று, கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களின் செமஸ்டர் தேர்வுக்கான அவகாசமனது நீட்டிக்கப்பட்டு  ஆக.,12 முதல் ஆன்லைனில் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

அக.,26ந்தேதிக்குள் பாடங்களை முடித்து, நவ.,2ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டால் நவ13ந்தேதி வரை வகுப்புகளை நடத்தலாம்; நவ.,19ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த  அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி அண்ணா பல்கலை தேர்வுகளை நடத்தியது.

ஆனால் இத்தேர்வுகளில் சில மாணவர்கள் காப்பியடித்து தேர்வை  முறைகேடாக எழுதியது கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இவர்களின் ஆன்லைன் வழி தேர்வு காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்த பின் காப்பியடித்தவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்க பல்கலை முடிவு செய்து உள்ளது.



author avatar
Kaliraj