28 C
Chennai
Friday, October 22, 2021

அக்.25 முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் பொறியியல் கல்லுரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்க வாய்ப்பு இருக்காது என்றும் பயோடெக்னலாஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் 69% இட ஒதுக்கீட்டின் படி கல்லுரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 7.5% இட ஒதுக்கீட்டின்படி இதுவரை பொறியியல் படிப்பில் 5,970 பேர் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3,443 கௌவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.

spot_imgspot_img

Hot Topics

Read More