இங்கிலாந்து vs நியூசீலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி விவரங்கள் !

2019 உலகக்கோப்பை தொடரானது லீக் மற்றும் அரையிறுதி சுற்று என அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும் நியூசீலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது.

இந்த இரு அணிகள் மோதிக்கொண்ட விவரங்கள்:

  • உலகக்கோப்பை தொடரில் நியூசீலாந்து அணி 5 முறையும் இங்கிலாந்து அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் நியூசீலாந்து அணி 43 முறையும் இங்கிலாந்து அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
  • லார்ட்ஸ் மைதானத்தில் நியூசீலாந்து அணி 2 முறை விளையாடியுள்ளது. இங்கிலாந்து அணி ஒரு முறை கூட விளையாட வில்லை.
author avatar
Vidhusan