இதய சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வெள்ளிக்கிழமை விசாரிக்க அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிமன்ற அனுமதி பெற்றும் இன்னும் விசாரணையை தொடங்காமல் இருக்கின்றனர் அமலாக்கத்துறையினர். தற்போது டெல்லியில் உள்ள மூத்த அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சென்னை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை மருத்துவமனையில் வைத்தே விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், வரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடைபெறவுள்ள இதய அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வுக்கு பின்னர் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.