ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் மோசடி செய்த ஆம்வே இந்தியா நிறுவனத்தின் ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடம், தொழிற்சாலை நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றையும் முடக்கம் செய்யபட்டுள்ளது. அதன்படி, ரூ.411.83 கோடி மதிப்புள்ள ஆம்வே நிறுவனத்தின் அசையும், அசையா செதுக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.345.94 கோடி ரொக்கத்தையும் முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்