கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

annamalai

கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழகத்தில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மத மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார் என்றும் மாணவி மரணத்தில் நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.