எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவன் இவன் படத்தினை தொடர்ந்து விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்  “எனிமி“. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நடிகர் விஷால் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.