#BREAKING: ஈமு கோழி மோசடி – பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை..!

ஈமு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் “ஸ்ரீ குபேரன்” என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணையை கடந்த 2014-ஆம் ஆண்டு குமார் என்பவர் நடத்தி வந்தார். ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்து, பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.7000 வழங்கப்படும் எனவும், 2 ஆண்டுகளில் முதலீடு தொகை கொடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை நம்பி 41 பேர் முதலீடு செய்யப்பட்டதில் ரூ. 62.5 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தநிலையில், குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார்.

இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று ஈமு கோழி மோசடியில் ஈடுப்பட்ட குபேரன் ஈமு பார்ம்ஸ் உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan