பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு…!!

146

புதுதில்லியில் உள்ள ESIC Social Security Officer/ Manager Gr-|| / Superintendent காலிப்பணியிடங்களுக்கு  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

யுஆர் பிரிவினர்களுக்கு 294 காலியிடங்களும், ஒபிசி பிரிவினர்களுக்கு 141 காலியிடங்களும், எஸ்சி பிரிவினர்களுக்கு 82 காலியிடங்களும், எஸ்டி பிரிவினர்களுக்கு 22 காலியிடங்களும் என மொத்தம் 539 காலியிடங்கள் உள்ளன. இதில் 19 இடங்கள் பிடபுள்யுடி பிரிவினர்களுக்கும், 49 இடங்கள் எக்ஸ் எஸ்எம் பிரிவினர்களுக்கும் உரியது.

Related imageமேலும் இதற்கான வயதுவரம்பு 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்க
ளும், பிடபுள்யுடி பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், எக்ஸ் எஸ்எம் பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

இதற்கான கல்வித்தகுதி இளநிலை பட்டம் பெற்று அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விண்ணப்பக்கட்டணம் யுஆர், ஒபிசி பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிடபுள்யுடி, எக்ஸ் எஸ்எம் பிரிவினர்களுக்கு ரூ.250. தகுதியுடையவர்கள் www.esic.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 5.10.2018. மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

DINASUVADU