” டிக் டாக் செயலி_க்கு தடை ” சட்டசபையில் வலியுறுத்தல்…!!

தமிழக பட்ஜெட்_டின் பொது விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற தமிழக சட்டசபை இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது.இன்றைய சட்டசபை கூட்டத்தில் M.L.A தமிம் அன்சாரி தமிழக சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் டிக் டாக் செயலியை தடை செய்யவேண்டுமென்று தெரிவித்தார்.
அப்போது அதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிவை சந்திப்பதால் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்வதை போல டிக் டாக் செயலியை_யும் தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்தார்.