இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி..!

இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி..!

இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி போடும் பணியை அதிதீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தோனேசிய நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, அஸ்ட்ரா ஜெனிகா, சினோ பார்ம், சினோ வேக் ஆகிய தடுப்பூசிகள் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு பெற உள்ளது.

Join our channel google news Youtube