யானையை சுட்டு கொன்ற வழக்கு- இரண்டு பேரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்

மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக

By bala | Published: Jul 02, 2020 05:21 PM

மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் இன்று காலை 25 வயது பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் விளைநிலத்தில் இறந்துகிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது . இந்த சம்பவ அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில்  யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக  தெரியவந்துள்ளது, மேலும் யானையின் காதுக்கு மேல் புறத்தில் 2 செ.மீ அளவிலான குண்டு துளைத்து மூளையில் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. என்றும் தெரியவந்துள்ளது, இது தொடர்பாக வனத்துறையினர் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc