15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட 7 வயது யானை..!

தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது .

அதனையடுத்து, யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தவறி விழுந்த யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால், கிணற்றில் தண்ணீர் இருந்ததால் யானை தண்ணீரை குடிப்பதால் மயக்கமடைய தாமதம் ஏற்பட்டது. பிறகும் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி கிரேன் உதவியுடன் தொடர் முயற்சியாக வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் போராடி இறுதியாக யானையை மீட்டனர்.

author avatar
murugan