கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை! மீறினால் சிறை தண்டனை!

இதுவரை மக்களவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடைசி கட்ட தேர்தல் மே 19இல் நடைபெற உள்ளது. அனைத்து முடிவுகளும் வரும் மே 23 இல் வெளியாகும்..இதனிடையில் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள், ஆன்லைன் சேனல்கள் தேர்தல் தொடங்குவதற்கு முன்னாரே யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது.

கடந்த மக்களவை தேர்தலில் சமூக வலைத்தள முடிவுகள் தேர்தலில் முக்கிய பங்குவகித்தது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த உடனே முதலில் சமூகவலைதளங்களுக்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை வகுத்தது.

அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு வருவதற்கு முன்னர் ட்விட்டரில் தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து பதிவுகளை உடனே நீக்க வேண்டும்மென்றும், யார் வெற்றி பெறுவார்கள் என்றும், எந்த கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியிடக்கூடாது என்று ம் அப்படி தெரிவித்திருந்த முடிவுகளும் நீக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மீறினால் அதற்குரிய தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment