27 C
Chennai
Sunday, October 24, 2021

#ElectionBreaking:ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்தான்…. விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி வெற்றி..!

உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது.

அதன்படி,இன்று உள்ளாட்சி தேர்தலுக்கானவாக்குகள் எண்ணும் பணிகள் காலை முதல்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதேபோல 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று,வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படித்தட்டை காந்திநகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர் வெற்றி பெற்றுள்ளார்.மொத்தம் 65 வாக்குகள் பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு,முன்னதாக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் இடைத்தேர்தலில் வேட்பாளர் கடல்மணி ,தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 424 வாக்குகள் பெற்று,ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவ்வாறு,ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களிடையே, கோவை குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

இதற்கிடையில்,விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் ஊராட்சி வாடப்படி 4-வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More