#ELECTIONBREAKING: மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ.!

#ELECTIONBREAKING: மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வைகோ.!

தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு என பல்வேறு சிறப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக.

தமிழக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க பாடுபடுவோம். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற குரல் கொடுப்போம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல். ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம். சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைத்திடவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம். தமிழகத்தில் இந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கப்படுவதை மதிமுக எதிர்க்கும். கல்வியை பொதுப்பிரிவிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டு வருவது என பல்வேறு அம்சங்கள் இருக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  காவேரி டெல்டாவை பாலைவனமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது, தமிழக நலன்களுக்கு எதிராக பாஜக அரசுக்கு கள்ளத்தனமாக அதிமுக துணைபோகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube