29 C
Chennai
Saturday, October 23, 2021

#ElectionBreaking:கள்ளக்குறிச்சி மாவட்ட & ஒன்றிய கவுன்சிலர் பதவி ;திமுக முன்னிலை…!

கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது.முதல் கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.37% வாக்குகள் பதிவாகியிருந்தது. 2ஆம் கட்டமாக அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 78.47% வாக்குகள் பதிவாகியிருந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் பலத்த பாதுகாப்புடன் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில்,கள்ளக்குறிச்சியில் 19 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 2 இடங்கள் மற்றும் 23 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1 இடம் பெற்று திமுக முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக,இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட 13-வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரியும், 5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ் என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அதேபோல,தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் தேர்வு ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More