27 C
Chennai
Friday, October 22, 2021

ElectionBreaking:முறையாக வாக்கு எண்ணிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை..!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்.9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,ஆங்காங்கே ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் சலசலப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும்,இதனால் வாக்கு எண்ணிகையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் கூறி செங்கல்பட்டு மாவட்ட திரிசூலம் பஞ்சாயத்து,வார்டு உறுப்பினர்,யூனியன் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்ட சத்திய நாராயணன்,சரஸ்வதி,முத்துக்கனி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என்றும்,முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.மேலும்,முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையம் முறையான நடக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் இரண்டு வராங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More