தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணியில் 17 ஆயிரம் ஊழியர்கள்

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த தேர்தலில் மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 45 மையங்களில், 17 ஆயிரம் ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழகத்தில் இந்த 45 மையங்களில் 36,000 போலீசார் மற்றும் 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.

author avatar
kavitha

Leave a Comment