32.2 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

தேர்தல் ஆணையம் அங்கீகாரம்! நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் நாளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, நாளை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் செயலாளர் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்த நிலையில்,  தற்போது அதிமுக பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதாவது, அதிமுகவின் சட்டவிதிகள் அனைத்தையும் அங்கீகரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதனை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் தொடர்பான கடிதத்தையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அனுப்பியுள்ளது.

எனவே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்த, ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த நிலையில், நாளை இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.