ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம்..! உத்தவ் தாக்கரே அதிரடி..!

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,  உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலமைச்சராக அறிவித்தது. அதன்படி ,நேற்று முன்தினம் மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். மேலும், துணை முதல்வராக பாஜக-வின் தேவேந்திரபட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment