EIA2020 : இது இறுதியானது அல்ல - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

EIA2020 : இது இறுதியானது அல்ல - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது, "சூழலியல் தாக்க மதிப்பீடு 2006" நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும்.

இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020" என்ற பெயரில் வெளியிட்டது. ஆனால்  "சூழலியல் தாக்க மதிப்பீடு 2020"  வரைவிற்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல” . சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

]]>

Latest Posts

"விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!"- பிரதமர் மோடி
தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி.!
சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு
#BREAKING: வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட அதிபர் டிரம்ப் அனுமதி!
#BREAKING: எதிர்க்கட்சியினர் கடும் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!