2500 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் எகிப்து மம்மி – வைரல் வீடியோ உள்ளே!

2500 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் எகிப்து மம்மியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களுக்காக பழமையான மம்மி ஒன்றிணைந்து வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சாக்யுரா எனும் பகுதியில் கல்லறைகளை வைத்துள்ளனர். மிகப்பழமையான இந்த கல்லறை சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 59 மரப் பெட்டிகளை தொல்பொருள் ஆராய்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள 2500 ஆண்டுகள் பழமையான போதகர்கள் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் 2500 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு சவப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்களுக்காக திறந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது. மம்மியின் சடலம் துணிகளால் சுற்றப்பட்டு இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற வீடியோ இதோ,

author avatar
Rebekal