#உத்தரவு#கல்வி நிறுவனங்கள் செயல்படகூடாது!

அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ந்தேதி வரை திறக்கக் கூடாது  என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 மத்திய மத்திய  மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் இது  குறித்து  அனுப்பிய சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.

இது  கல்வி நிறுவனங்கள் குறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்துறை அமைச்சகம் ஊரடங்கு காலங்கில் சில தளர்வுகளை அளித்தாலும், பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இருந்தபோதிலும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஜூலை அனைவரும்  31ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணி செய்ய  அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் முக்கிய தேவைகள் இல்லாத நிலையில் ஊழியர்களை பணிக்கு அழைக்க வேண்டாம் இவற்றை தவிர்க்க  வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் அதேநேரம் இணையவழி கற்றல்மற்றும் தனிநபர் இடைவெளியுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அனுமதி நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் காலகட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் கல்விசார் செயல்பாடுகளுக்கு  மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

author avatar
kavitha