மாணவர்களுக்கு அறிவிப்பு :ஜூலை.,24 வரை விண்ணப்பிக்கலாம்! சுந்தரனர் பல்கலை.தகவல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பிற்கு

By kavitha | Published: Jun 28, 2020 08:38 AM

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  பட்டப்படிப்பிற்கு சேர விருப்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான இணையதள முகவரியையும் அளித்து தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் என அனைத்தும் தற்போது ஊரடங்கால் இயங்க முடியாத சூழலில் தான் ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு படிக்கும் வசதி ஏற்பட்டினை அரசு செய்துள்ளது.இந்நிலையில் தான் இதே போல கல்லூரி மாணவர்களுக்கு என்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளதாவது; திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர ஆன்லைன் (msuniv.ac.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள பல்கலைக்கழகம். மேலும் 45 வகையான படிப்புகளின் சேர ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்; ஆகஸ்ட் 2ம் தேதி ஆன்லைனில் நுழைவுத்தேர்வானது நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது மேற்கண்ட விவரங்களை குறிப்பிட்ட இணையத்தளத்தில் பார்க்கவும் அறிவுறுத்தி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc