‘கல்வி ரகசிய பட்டியலில் உள்ளது’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வியை ரகசியப் பட்டியலில் வைத்திருக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி மாநில பட்டியலிலும், பொது பட்டியலிலும் இல்லை, ரகசிய பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது என விமர்சித்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க தேவையில்லை என்பது போல் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தாக கூறினார். கடைசி மூன்று நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என்று கூறியதாக கூறினார். மேலும், போலி சான்றிதழ்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சான்றிதழ்கள் உண்மை தன்மையை உறுதி செய்வோம் எனவும் உறுதி அளித்தார்.