இடைத்தேர்தல் பணி தீவிரம்.! அதிமுக தேர்தல் பணிக்குழுவை அமைத்த இபிஎஸ்.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்றும் குழுவை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலம் உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக ஆரம்பித்து செயல்பட்டு வருகின்றன.

பலமான திமுக கூட்டணி : இதில் திமுக கூட்டணி ஆதரவோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள்  உட்பட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிக்களும் திமுகவுக்கு ஆதரவாக உள்ளன.

இபிஎஸ் – ஓபிஎஸ் : அதேபோல் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம் அங்கு இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணிகள் தேர்தல் களத்தில் இருப்பதால் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள்? இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதில் மற்ற கூட்டணி கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு என கூறி வருகின்றனர். இபிஎஸ் – ஓபிஎஸ் என ஒரு சில கட்சிகள் தனி தனி பெயர்கள் கூறினாலும், பாஜக உள்ளிட்ட பிரதான கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு என பொதுவாகவே கூறி வருகின்றன.

தேர்தல் பணிக்குழு : இதில் முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் , பொன்னையன், தம்பிதுரை எம்பி, ஆகியோர் உட்பட 46 பேர் அடங்கிய குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கு போட்டியாக எப்படியும், ஓபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு அதிமுக தேர்தல் பணிக்குழு என்று அறிவிக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment