அதிமுகவினர் பேரணி நடத்தி வந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநரிடம் மனு அளித்தார் இபிஎஸ்.
சென்னை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. போலி மது, கள்ளச்சாராயம் உயிரிப்பு விவகாரம், திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வந்தது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேரணியால், கிண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுகவினர் பேரணி நடந்து வந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.
அப்போது, போலி மது, கள்ளச்சாராய இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தனர். விஷச்சாராயம் அருந்தி அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார்.