அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து பேரணி தொடங்கியது.
சென்னை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. போலி மது, கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் மற்றும் திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளார் இபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வரும் நிலையில், கிண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 18-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று, மனு அளிக்க முடிவானது. அதன்படி, இபிஎஸ் தலைமையில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.