அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை .ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ( ஜூன் 12-ஆம் தேதி) அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட  அறிவிப்பில்,இன்று (ஜூன் 12-ஆம் தேதி) காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.