புரவி புயல் எதிரொலி! தூத்துக்குடிக்கு வருகை தந்த இரண்டு என்.டி.ஆர்.எப் குழுவினர்!

புரவி புயல் எதிரொலி! தூத்துக்குடிக்கு வருகை தந்த இரண்டு என்.டி.ஆர்.எப் குழுவினர்!

புரவி புயல் எதிரொலியால் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 என்.டி.ஆர்.எப் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்றும், அதே வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என  எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 என்.டி.ஆர்.எப் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube