புரேவி புயல் எதிரொலி! பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிதீர்த்த மழை!

புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், தற்போது பாம்பன் அருகே நிலைகொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புரேவி  புயலின் தாக்கம் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும், பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.