நிவர் புயல் எதிரொலி! மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்! – பாலசந்திரன்

நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால், கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மற்றும் புதுசேரியை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் கூறுகையில், சென்னையில் சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்றும், நாகை, காரைக்கால், கடலூர் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் மணிக்கு 155 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.