இவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

இவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?

சரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பண்டமாகும்.குழந்தைகளை சாக்லேட் சாப்பிட கூடாது என்று கண்டிக்கிறோம் ஆனால் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது.

எனவே ஒரு நாளைக்கு சுமார் 28 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

  • ஒரு நாளைக்கு இந்த அளவு சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது.இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் அளவை அதிகரித்து வயது முதிர்வை தடுக்கிறது.
  • தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதால் இதயநோய் வருவதற்கான பாதிப்புகள் குறையும்.செரிமானம் அதிகரிக்கும்.
  • சாக்லேட்டுகளில் பிளவனாய்டுகள் அதிகம் இருப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
Join our channel google news Youtube