உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் சுலபமான வழிமுறைகள்.!

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் சுலபமான வழிமுறைகள்.!

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் :

பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை.

பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது.

இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து இந்த சிக்கல்களிலிருந்து எப்படி விடுவது என்பதை பின்வருமாறு காணலாம்.

  • தினமும் காலை எழுந்தவுடன் கற்றாழை ஜெல்லை எலுமிச்சை பழத்தின் அளவு எடுத்து கொண்டு வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.
  • தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிப்பதுக்கு பதிலாக இந்த கலவையை குடித்து வந்தால் உடம்பில்  கொழுப்பு தாங்காது.
  • கருவேப்பிலையுடம் சிறிது உளுந்து,புளி மற்றும் உப்பை சேர்த்து துவையல் வைத்து  சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பு குறையும்.
  • ஆப்பிளில் நார்சத்து அதிகம் இருப்பதால் இது உடம்பில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது.
  • பாலில் நன்கு வேகவைத்த பூண்டை கலந்து காலை ,மாலை என இரண்டு வேலையும் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
Join our channel google news Youtube