கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் ஈஸ்டர் கொண்டாட்டம்..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தினமும் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா வைரஸ் சீனா அடுத்து ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 இத்தாலியில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,157 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகையில் பல நாடுகளில் இருந்து  பக்தர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் கூடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

அதனால் இந்த ஆண்டு ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்களை நேரில் வரவழைக்காமல் நடத்தப்படும் என வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

author avatar
murugan