பருவநிலை மாற்றத்தின் பூமி உச்சக்கட்டம்.! எச்சரித்த விஞ்ஞானிகள்..!

பருவநிலை மாற்றத்தால் பூமி உச்சகட்ட புள்ளியை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மக்களிலின் அலட்சியத்தால் பூமி வெப்பமடைவது  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பனி உருகுதல், அதிக வெப்பம், கடுங்குளிர் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டிப்பிங் பாயின்ட் என்ற அளவீட்டு முறை மூலம் பருவநிலை மாற்றத்தை விஞ்ஞானிகள் அளந்து வருகின்றனர்.
இந்நிலையில் டோமினோ விளைவு என்ற சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளால் பூமி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிப்பிங் பாயிண்ட் முறையில் ஏற்கனவே அதிக அளவான 9 புள்ளிகளை தொட்டுவிட்டதாகவும், இங்கிலாந்தின் உள்ள எக்ஸடர் என்ற  பல்கலைக்கழக பேராசிரியர் டிம் லென்டான் தெரிவித்திருந்தார்.
இதனால் வரும் காலங்களில் விளைவு  அதிகமாக இருக்கும் என்று பேராசிரியர் டிம் லென்டான் என்பவர் கூறியிருக்கிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்