டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம்.! பொதுமக்கள் பதற்றம்.!

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர்

By manikandan | Published: May 29, 2020 11:34 PM

டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று இரவு 9.20 மணிக்கு தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc