இ பாஸ் நடைமுறை தமிழகத்தில் தொடரும் – தலைமை செயலர் சண்முகம்!

இ பாஸ் நடைமுறை தமிழகத்தில் தொடரும் – தலைமை செயலர் சண்முகம்!

தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை மேலும் தொடரும் என தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் உத்தரவு பெற்று அதன் பின் செல்ல வேண்டும் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் முக்கியமான காரணங்களால் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை எனவும், பேருந்து ஓட்டுநர்கள் தங்களுக்கு இதனால் வருமானம் குறைவாக உள்ளது எனவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை மேலும் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube